நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு - 2026 இல் உலகை நடுங்க வைக்கபோகும் பேரழிவுகள் எவை?
2026இல் உலகில் நடக்கப்போகும் பேராபத்தான நிகழ்ச்சிகள் பலவற்றை தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
நோஸ்ட்ராடாமஸ்
16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரும் தீர்க்கதரிசியுமான நோஸ்ட்ராடாமஸ், தனது மாய கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர்.
அவரது பல கணிப்புகள் வரலாற்று நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் படுகொலை, ராஜீவ் காந்தியின் படுகொலை போன்ற பல கணிப்புகளை நோஸ்ட்ராடாமஸ் முன்பே கணித்திருந்தார்.
இதனை தொடர்ந்து 2026ம் ஆண்டு உலகத்தில் நடக்கப்போகும் பேராபத்துக்கள் அழிவுகள் பற்றி அவர் கூறியுள்ளார்.

கணிப்புக்கள்
தேனீக்களின் பெரும் கூட்டம் - நோஸ்ட்ராடாமஸின் கவிதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பின் படி "தேனீக்களின் பெரும் கூட்டம் எழும்... இரவில் பதுங்கியிருந்து..." இது முற்றிலும் திகிலூட்டும் கணிப்பாகும், ஆனால் நிபுணர்கள் இதன் அர்த்தம் தேனீக்களின் கூட்டம் நம்மைத் தாக்கப் போகிறது என்று கூறவில்லை. பண்டைய எகிப்திலும் நெப்போலியனின் ஏகாதிபத்திய சின்னத்திலும் காணப்படுவது போல், தேனீக்கள் சில நேரங்களில் ஒரு அரசியல் சின்னமாகவும், முடியாட்சி மற்றும் அரசாட்சியைக் குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே உலகளவில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம்.

டிசினோவுக்கான எச்சரிக்கை - மற்றொரு தீர்க்கதரிசனத்தில் 'நகரம் காட்டும் உதவியின் காரணமாக... டிசினோ இரத்தத்தால் நிரம்பி வழியும்...' டிசினோ சுவிட்சர்லாந்தின் தெற்கே உள்ள மண்டலமாகும், இதில் காடுகள், ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த பெரிய பகுதி உள்ளது. இந்த கணிப்பில் இந்த மண்டலத்தைப் பற்றி ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை, ஆனால் இது மிகவும் ஆபத்தான கணிப்பாகும்.

செவ்வாய் வானத்தை ஆளும் மற்றும் கிழக்கிலிருந்து மூன்று நெருப்புகள் எழும் - இந்தக் கணிப்பு, செவ்வாய் குறிக்கும் போர் மற்றும் மோதலின் ஆற்றல் உலகில் பதற்றங்கள் அதிகரிக்கும் காலத்தை உவமையாக காட்டுகிறது. “மனித இரத்தம் சரணாலயத்தைத் தெளிக்கும்” என்பது சமூக, அரசியல் அல்லது இராணுவ கலகங்களை குறிக்கும் கவிதைச் சொல்லாக இருக்கலாம். “கிழக்கில் மூன்று நெருப்புகள் எழுதல்” என்பது சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்காசியா போன்ற கிழக்கத்திய சக்திகளின் எழுச்சியை சுட்டிக்காட்டுகிறது. கடைசியாக, “மேற்கு தனது ஒளியை இழக்கிறது” என்பது மேற்கத்திய உலகின் ஆதிக்கம் மெதுவாக குறைந்து, உலக அதிகாரத் திசை கிழக்குக்கு மாறும் மாற்றத்தை உவமையாக குறிக்கிறது.

'ஏழு மாதங்கள், பெரும் போர் - சில நிபுணர்கள் இதை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர், மற்றவர்கள் இதை மூன்றாம் உலகப் போருடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |