இனியாவது கொஞ்சமா சாப்பிடுங்க... மக்களுக்கு அதிரடி உத்தரவிட்ட வடகொரிய அதிபர்!
கொரோனா பரவல் காரணமாக சீனாவிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்கள் சரியாக வட கொரியாவுக்கு கிடைக்காமல் போய்விட்டன.
மேலும், புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால், விவசாயம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால், அங்கு உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டு மக்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2025-ம் ஆண்டு வரை மக்கள் உணவை குறைவாக உண்ண வேண்டும் எனவும், அப்படி செய்தால் கொரோனாவிடம் இருந்து நம்மளை பாதுகாத்து உணவு பஞ்சத்தை போக்க முடியும் என்று என தெரிவித்துள்ளார்.
இந்த தகவலையறிந்த உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். இதன்பின்னர், ஐ.நா.வின் உணவுக் கழகம் தெரிவித்ததாவது, எல்லைக்கு சீல் வைத்த நிலை தொடர்ந்து நீடித்தால் வடகொரியாவில், உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தலைவிரித்தாடும் என தெரிவித்துள்ளனர்.