மறுமணத்தின் அவசியத்தை உணர்த்தும் “நூறு சாமி” : பாஸ்கர் கதாபாத்திரத்தின் பின்னணி என்ன? Emotion interview
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள “நூறு சாமி” திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மனித உறவுகள், குடும்ப பாசம் மற்றும் சமூகத்தில் இன்னும் பேசப்படத் தயங்கப்படும் முக்கியமான ஒரு கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், பலரது மனதையும் தொட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் இளம் நடிகர் அஜய் திஷன் நடித்துள்ளார்.

செல்வி (ஸ்வாசிகா) என்பவரின் மூத்த மகனாக வரும் பாஸ்கர், ஆரம்பத்தில் தனது தாயின் மறுமணத்தை கடுமையாக எதிர்க்கும் பதின்ம வயது இளைஞராக சித்தரிக்கப்படுகிறார்.
ஆனால் காலப்போக்கில் தாயின் தனிமை, வலி மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவருக்கு மறுமணம் செய்து வைக்க போராடும் பொறுப்பான மகனாக மாறுகிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் கதாபாத்திரம் வெறும் கற்பனை அல்ல என்பது மேலும் சுவாரஸ்யமான விஷயமாகும். நிஜ வாழ்க்கையில் தனது தாயின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவருக்கு மறுமணம் செய்து வைத்த ஒரு இளைஞரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே பாஸ்கர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், நிஜ வாழ்க்கை பாஸ்கர் தனது தாயின் மறுமணம் தொடர்பான அனுபவங்கள், சமூகத்தில் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அவற்றை இந்தக் காணொளி வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |