அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க

Mushroom Weight Loss Constipation Healthy Food Recipes
By Vinoja Jun 07, 2024 01:47 PM GMT
Report

காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும். 

காளான்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் இது செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்க உதவுகின்றது.

அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க | Non Veg Taste Mushroom Curry Recipe In Tamil

மேலும் புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.

காரசாரமா ஹைதராபாத் சிக்கன் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க

காரசாரமா ஹைதராபாத் சிக்கன் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க


இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட காளானை வைத்து அசைவத்தையே மிஞ்சும் அளவுக்கு சுவையான காளான் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க | Non Veg Taste Mushroom Curry Recipe In Tamil

தேவையான பொருட்கள்

வதக்கி அரைப்பதற்கு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 1

அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க | Non Veg Taste Mushroom Curry Recipe In Tamil

குழம்பிற்கு தேவையானவை 

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

பட்டை - 2

கிராம்பு - 5

கல்பாசி - சிறிய துண்டு

அன்னாசிப்பூ - 1

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

காளான் - 200 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க | Non Veg Taste Mushroom Curry Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து பொரிய விட வேண்டும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க | Non Veg Taste Mushroom Curry Recipe In Tamil

பின்னர் அதனுடன்  தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை நன்றாக வதக்கி எடுத்து ஆரவிட வேண்டும். பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் போடடு பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு  குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர்  அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வரும் வரையில் நன்றாக  வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய காளானை சேர்த்து வதக்க வேண்டும்.

அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க | Non Veg Taste Mushroom Curry Recipe In Tamil

பின்னர் அதனுடன் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விட வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி, குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை கொதிக்க விட்டு பின்னர் ஆரவிட வேண்டும்.

அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா? இப்படி செய்து பாருங்க | Non Veg Taste Mushroom Curry Recipe In Tamil

பின்னர் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் மணமணக்கும் காளான் குழம்பு தயார்.

கத்திரிக்காய் கார குழம்பு... இனிமேல் இப்படி செய்ங்க சுவை அட்டகாசமா இருக்கும்

கத்திரிக்காய் கார குழம்பு... இனிமேல் இப்படி செய்ங்க சுவை அட்டகாசமா இருக்கும்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US