அசைவ பிரியர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி! சிக்கன் தந்தூரிக்கு தடை விதித்த மாநிலம்
இந்திய மாநிலம் டெல்லியில் அசைவ உணவான சிக்கன் தந்தூரிக்கு தடைவிதித்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிக்கன் தந்தூரி
அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சிக்கன் ஆகும். சிக்கனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுவதையும் விரும்புகின்றனர்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள சிக்கனில் தந்தூரி என்றால் அலாதி பிரியம் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் சிக்கன் தந்தூரிக்கு இந்தியாவில் மாநிலம் ஒன்று தடை விதித்துள்ளது. ஆம் இந்திய மாநிலமாக டெல்லியில் தான் சிக்கன் தந்தூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தூரிக்கு தடை ஏன்?
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. இவ்வாறு காற்று மாசுபாட்டின் காரணமாக மக்கள் பெரும் பிரச்சனையினை சந்தித்து வருகின்றனர்.
இதற்காக டெல்லி அரசு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதாவது காற்றின் தரம் மோசமடைவதை கருத்தில் கொண்டு, ஹோட்டல் மற்றும் உணவகங்களில் நிலக்கரி, மரக்கட்டை இவற்றினை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது.
நிலக்கரி, மரக்கட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கன் தந்தூரிக்கும் இதனால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாசுபாடானது மூச்சுத்திணறல், நுரையீரல் பிரச்சனை, கண் எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படுவதால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |