இங்கு அசைவ உணவுக்கு தடை! உலகின் ஒரே நகரம் எங்கிருக்கிறது?
உலகின் வேறெந்த நகரிலும் இல்லாத தடையாக இந்நகரில் அசைவ உணவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, சைவ உணவுகளை மட்டுமே பெறலாம்.
சமணர்களின் புனிதத்தலம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாலிதானா(Palitana).
சமணர்களின் புனித தலமான இந்நகரில் நூற்றுக்கணக்கான சமணக் கோயில்கள் உள்ளன, இங்கு அமையப்பெற்றிருக்கும் சத்ருஞ்ஜெய மலை புகழ்பெற்ற ஒன்றாகும்.
அசைவ உணவுக்கு தடை
நகரின் புனிதத்தை பாதுகாக்கும் வகையிலும், பாரம்பரியத்தை போற்றும் வகையில் இங்கு அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதவிதமான சைவ உணவுகளை இங்கு பெறலாம், இதற்காக ஏராளமான கடைகள் இங்கு உள்ளன.
இதன்மூலம் தங்களது மத நம்பிக்கைக்கு மரியாதை செலுத்தப்படுவதாக நம்புகின்றனர். மேலும் சைவ வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும் இது குறிக்கிறது.
விற்கவும் தடை
இறைச்சி, முட்டை விற்பனை மற்றும் விலங்குகள் கொல்லப்படுவதும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறினால் கடுமையான தண்டனையும் உண்டு.
கடந்த 2014ம் ஆண்டு இறைச்சி கடைகளை மூடக்கோரி சுமார் 200 துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற விவாதம் எழாமல் இல்லை.