அசத்தலான அம்சங்களுடன் நோக்கியா ப்ளிப் போன் அறிமுகம்!
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஆனது நோக்கியா 2660 ப்ளிப் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய பீச்சர் போன் மைக் மற்றும் இயர்பீசை உங்கள் அருகில் கொண்டு வந்து, பயன்படுத்துவதை எளிமையாக்குகிறது.
இந்த மொபைலில் முக்கிய அம்சமாக உள்ள எமர்ஜன்சி பட்டன் மூலம் விரும்புபவரை மிக எளி தில் தொடர்பு கொள்ள முடியும்.
ஏதே னும் அவசர சூழலில் அதிக பட்சம் ஐந்து காண்டாக்ட்களுக்கு இது பற்றிய தகவல் அனுப்பப்பட்டு விடும்.

அம்சங்கள்
2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
1.77 இன்ச் 160x128 பிக்சல் QVGA இரண்டாவது டிஸ்ப்ளே
அதிகபட்சம் 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி107 சிங்கில் கோர் பிராசஸர்
48MB ரேம் 128MB மெமரி மெமரியை
கூடுதலாக நீட்டிக்கும் வசதி டூயல் சிம் ஸ்லாட்
எஸ்30 பிளஸ் ஒஎஸ் விஜிஏ பிரைமரி கேமரா,
எல்இடி பிளாஷ் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எப்எம் ரேடியோ,
MP3 பிளேயர் 4ஜி வோல்ட்இ,
ப்ளூடூத் 4.2, மைக்ரோ யுஎஸ்பி 2.0 1450 எம்ஏஹெச் பேட்டரி

விலை விபரங்கள்
முதலில் நோக்கியா 2660 ப்ளிப் போன் பிளாக், ரெட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மொபைல் போனின் விற்பனை நோக்கியா இந்தியா ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.