ஆட்டிசம் குறைபாடு என்றால் என்ன? அறிகுறிகளும்... சிகிச்சைகளும்
நரம்பியல் பிரச்சனையான ஆட்டிசன் பாதிப்பு குறித்தும் இதன் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டிசம்
ஆட்டிசம் என்பது வாழ்நாள் முழுவதும் வெளிப்படும் நரம்பியல் நிலையாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக தொடர்புகளில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். கற்றல் முறைகள், வழக்கமான தகவல் தொடர்புகளிலும் சவால்களை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த குழந்தையின் வளர்ச்சியில் இயல்பாக வளர்கிறார்களா என்பதை கவனிக்கும் போது இந்த ஆட்டிசம் குறித்தும் பெற்றோர்கள் அறிவது அவசியமாகும்.
ஆட்டிசம் என்பது நோயல்ல இது ஒரு குறைபாடு என்று கூறும் மூளை நரம்பியல் மருத்துவர்கள், இவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதையும் கூறி வருகின்றனர்.
மூளை வளர்ச்சி குறைபாடு (ஆட்டிசம்) இருப்பவர்கள் பேசுவதில், மற்றவர்களுடன் பழகுவதில் பெரும் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
எப்படி கண்டறிவது?
குழந்தைக்கு மந்தமான வளர்ச்சி (Developmental Delay) இருக்கும். குழந்தைகளுக்கு, ஆட்டிசம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றாலும், சராசரியாக ஒரு வயது வரை ஆட்டிசத்தை கண்டறிவது கடினமாக இருக்கும்.
1 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்து நாம் ஆட்டிசம் இருப்பதை கண்டறியலாம்.
கைகளால் மற்றொன்றை சுட்டுக் காட்டுதல், நாம் பேசுவதற்கு தலையசைத்தல் போன்ற சைகைகள் குறைந்த அளவில் இருப்பதுடன், மழலை மொழி பேசாமல் இருப்பார்கள். இயல்புக்கு மாறான சப்தம் எழுப்புதல் மற்றும் நன்கு தெரிந்த சொற்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றை வைத்து இவர்களை கண்டறியலாம்.
மேலும் இவர்கள் மற்றவர்களை கண்களால் உற்றுநோக்குவதிலும், சிரமத்தை எதிர்கொள்வார்கள். மற்றவர்கள் செய்வதை பின்பற்றுவதிலும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தையும் சந்திப்பார்கள். மேலும் தங்கள் பெயரிட்டு அழைக்கும் போது பதில் அளிக்காமல் இருப்பார்கள்.
விரல்கள், கைகள், மற்றும் உடலை இயல்புக்கு மாறாக அசைப்பது. செய்ததையே/ சொன்னதையே மீண்டும் மீண்டும் செய்வது/ சொல்வது.
அற்பமான விஷயங்களின் மேல் மிகுந்த கவனம் செலுத்துவது மற்றும் தினமும் ஒரே வகையான உணவை மட்டும் விரும்புவதும் இவர்களிடம் நமக்கு தெரியும் அறிகுறியாகும்.
ஆட்டிசம் குறைபாடு உண்டாகிறது?
ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில் மரபு ரீதியிலான காரணங்கள் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வது, கருவுற்றிருக்கும் போது தாயின் மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தினை தவிர்க்க வேண்டும்.
குழந்தை கருவில் போதோ அல்லது மகப்பேறின் போதோ கழுத்தில் கொடி சுற்றுதல், முதன்முதலாக குழந்தையிடமிருந்து வெளியேறும் மலம் குழந்தையின் சுவாசப்பாதைக்குள் நுழைதல், குழந்தை பிறந்த உடன் அழாமல் இருப்பது, பின் நாட்களில் ஏற்படும் மஞ்சள் காமாலை பிரச்சினை, மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மூளையின் அமைப்பில் உள்ள மாறுபாடுகள் (structural abnormalities), அல்லது மூளையின் வேதித்தனிமங்களில் (chemical abnormalities) உள்ள குறைபாடுகளும் குழந்தையின் ஆட்டிசத்துக்கு காரணமாகலாம்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு தனிப்பட்ட கவனம் தேவை. அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், பொறுமை அவசியமாகும். இதனை முழுமையாக குணப்படுத்த இயலாது என்பதால் கட்டாயம் பொறுமை மட்டுமே அவசியமாகும்.
சிகிச்சை முறை என்னென்ன?
குழந்தைகளுக்கான மூளை நரம்பியல் மருத்துவர், குழந்தை நல மருத்துவர்களின் கண்காணிப்புடன் ஸ்பீச் தெரபி, Behavioural தெரபி, Occupational தெரபி, பிசியோதெரபி என்று கொடுக்கப்படுகின்றது.
முற்றிலுமாக தீர்க்க முடியாது என்றாலும், அறிகுறிகளின் தீவிரத்தை குறைத்து ஓரளவிற்கு இயல்பான வாழ்க்கையை அளிக்க சில மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.
இவர்களிடம் என்ன வித்தியாசம்?
ஆட்டிசம் என்பது ஒரு ஸ்பெக்ட்ரம் டிஸ் ஆர்டர் அதாவது மிதமானது முதல் தீவிரமானது வரை பலதரப்பட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இவை அனைத்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஏற்படாமல், ஒருசில பெண் குழந்தைகளுக்கு Rett’s syndrome உள்ளிட்ட, உடலுக்கு பொருத்தமில்லாத சிறிய தலை, அல்லது கைகால்கள் இறுக்கமடைந்திருப்பது (spasticity) போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
சிந்திப்பதில், கல்வி கற்பதில் இயலாமை, நுண்ணறிவதில் குறைபாடுகள் இருப்பதுடன், வலிப்பும் அவ்வப்போது ஏற்படுகின்றது.
image: iStock.com via Antonio_Diaz
தொடர் சிகிச்சை தேவையா?
அறிகுறிகள் மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கு மருந்துகள் இல்லாமல், ஸ்பீச் தெரபி, பிஹேவியரல் தெரபி போன்ற புனரமைப்பு சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.
ஆனாலும் செய்வதையே திரும்ப திரும்ப செய்யும் Stereotypy, மூர்க்கத்தனம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
image: Getty
நோயின் தீவிரம் குறைவாகவும், குழந்தைகள் இயல்பான வளர்ச்சியில், சிறு குறைபாடுடன் இருந்தால் இயல்பான வாழ்க்கை(திருமண வாழ்க்கை) மேற்கொள்ளலாம். ஆனால் தீவிரமாக இருக்கும்பட்சத்தில் இவர்களுக்கு இயல்பான வாழ்க்கை கிடைக்காமல் போய்விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |