“ஜோதிகா நடித்தது போல் யாராலும் நடிக்க முடியாது” பழைய சந்திரமுகியைப் புகழ்ந்த புது சந்திரமுகி!
சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவை போல யாராலும் நடிக்க முடியாது என சந்திரமுகி பாகம் இரண்டில் நடித்து வரும் நடிகை தெரிவித்துள்ளார்.
சந்திரமுகி
2005ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி அப்போதைய 90ஸ் கிட்களை பயத்தின் உச்சியின் அமர வைத்த திரைப்படம் தான் சந்திரமுகி.
இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா வடிவேலு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கி, வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.
மேலும் இத்திரைப்படம் அந்தக் காலக்கட்டத்தில் பெரிய வெற்றிப்படமாக ஓடியது. சந்திரமுகி பாகம் ஒன்று பெரும் வெளியானதில் இருந்து இயக்குனர் பி.வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்க வேண்டும் என்று பல கட்ட முயற்சி மேற்கொண்டார்.
ஆனால் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் வேறு ஹீரோவை வைத்து இயக்கும் முயற்சியில் இறங்கிய இயக்குநர் பி.வாசு தற்போது நடிகர் ராகவா லாரன்சை வைத்து சந்தரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார்.
ஜோதிகாவைப் புகழ்ந்த கங்கணா
சந்திரமுகி பாகம் 2இல் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியான கங்கணா ரனாவத் நடித்துக்கிறார். காமெடி நடிகர் வடிவேலு சந்திரமுகி 2வில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார்.
இந்நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் ஜோதிகாவிடம் தங்களுக்கு பிடித்த நடிகை யாரென கேட்க அதற்கு அவர் கங்கனா ரனாவத் என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த பதிலை மேற்கோள்காட்டி சந்திரமுகி 2இல் ஜோதிகா நடித்தது போல் யாராலும் நடிக்க முடியாது.
இதில் ஜோதிகாவின் நடிப்பு போல் நடிப்பது சாத்தியமற்றது. அவர் அளவிற்கு இல்லை என்றாலும் நடிக்க முயற்சி செய்வேன்." என கங்கணா ரனவத் தெரிவித்திருந்தார்.
மேலும், சந்திரமுகி 2 வின் இறுதி கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.