விஜய் ரசிகர்களால் திரையரங்கிற்கு வந்த புதிய கட்டுப்பாடு : வெளியிட்டப்பட்ட அதிரடி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற நாளை வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு நாள்தோறும் எகிறிக்கொண்டே உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.
தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் ரிலீஸ்க்கு முன்பு ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகி உள்ளன. படம் நாளை வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ளமையால் விஜய் ரசிகர்கள் பெரும் கெண்டாட்டத்தில் உள்ளனர்.
அதிரடி அறிவிப்பு
லியோ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் அக்டோபர் 5 ஆம் திகதி வெளியாகியிருந்ததை அனைவரும் அறிந்ததே தமிழகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகள் தணிக்கை செய்யப்படாத நிலையில் டிரெய்லரை தங்கள் திரைகளில் வெளியிட்டனர்.
வி்ஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் சில திரையரங்குகளில் கதிரைகள் சேதமடைந்தன. மேலும், சிபிஎஃப்சியிடம் இருந்து நோட்டீஸ் பெறப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.
லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்த சர்ச்சைக்கு தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடியான முடிவொன்றை அறிவித்துள்ளார்.
திரையரங்குகளில் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரைப்பட டிரெய்லர்களை திரையிடக் கூடாது என்பதே அந்த அறிவிப்பாகும். இனிமேல், தணிக்கை செய்யப்பட்ட டிரெய்லர்கள் மட்டுமே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |