இனி யூடியூப்பில் விளம்பரங்கள் வராது.... கூகுள் எடுத்த முடிவு... வெளியான முக்கிய தகவல்
யூடியூப்பில் இனி விளம்பரம் வராது என்று கூகுள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனி யூடியூப்பில் விளம்பரங்கள் வராது
கூகுளுக்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக இருக்கும் யூடியூப் தன் வருவாயை அதிகரிக்கும் விதமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
யூடியூப்பில் ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது சில விளம்பரங்கள் வரும். தற்போது இந்த அனைத்து வீடியோக்களும் விளம்பரங்களின் தொல்லை இல்லாமல் யூ-டியூப் வீடியோக்களை பார்க்க விரும்பும் பயனாளர்களுக்காக யூ-டியூப் பிரீமியம் ஒரு புதிய சந்தாவைக் கொண்டு வந்திருக்கிறது.
நாம் யூடியூப்பில் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென மேல் பகுதியிலோ அல்லது கீழ் பகுதியிலோ விளம்பரம் வந்து நிற்கும்.
இது பார்வையாளர்களுக்கு சில நேரங்களில் கடுப்பை ஏற்படுத்துவதாக புகார்கள் அதிகமாக வந்த நிலையில், கூகுள் யூடியூப்பில் ஏப்ரல் 6ம் தேதி முதல் விளம்பரம் வராது என்று குறிப்பிட்டுள்ளது.
யூடியூப் பயனாளர்கள் ரூ.129 செலுத்தினால் விளம்பரமில்லா வீடியோக்கள், ஆஃப் லைனில் வீடியோக்களை டவுன்லோடு செய்து பார்ப்பது போன்ற வசதிகளை பெறலாம்.
இந்நிலையில், கூகுள் யூடியூப் “overlay ads” என்ற விளம்பர ஆப்ஷனை அடுத்த மாதம் முதல் கூகுள் நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.