No Internet, No ATM- டிஜிட்டல் வசதிகள் இல்லாத ஒரே நாடு - காரணம் இதுவா?
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, ஏடிஎம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதை பற்றிய விபரத்தை பார்க்கலாம்.
டெக்னாலஜி இல்லாத நாடு
இன்றைய உயர் தொழில்நுட்ப யுகத்தில், இணையம் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது என்பது சாத்தியல் இல்லாத ஒரு விடயம்.
பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இணையம் மற்றும் மொபைல் செயலிகளை முழுமையாக நம்பியிருக்கிறார்கள்.
உணவு ஆர்டர் செய்வது, டாக்ஸி முன்பதிவு செய்வது, பணத்தை மாற்றுவது அல்லது உலகின் எந்த மூலையில் உள்ள உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவது என அனைத்தையும் இணையம் மிகவும் எளிதாக்கியுள்ளது.
இணையம் இல்லை
தற்போது மனிதனுக்கு தேவையான இணையம் டெக்னாஜி இல்லாத நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எரித்திரியா தான்.
இது தான் இணையம் பயன்படுத்தப்படாத ஒரு நாடு. இந்த நாடு ஆப்பிரிக்காவின் கொம்பில் செங்கடலின் கரையில் அமைந்துள்ளது.
இதன் தலைநகரம் அஸ்மாரா ஆகும். இங்குள்ள மக்கள் நம்மை போல வாழ்வதில்லை மாறாக அவர்களுக்கென்று இருக்கும் வாழ்க்கை முறையை பயன்படுத்துகிறார்கள்.
99% மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், இணையம் மக்களின் வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால் எரித்திரியாவில், இணைய சேவைகள் கிடைக்க வாய்புகள் கிட்ட தட்ட இல்லை.
ஊடக அறிக்கைகளின்படி, இந்த நாட்டின் 99% மக்கள் இணையம் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
எரித்திரியாவிலும் இணைய வேகம் மிகக் குறைவு. இங்கு வைஃபை கிடைக்கும் ஒரு சில கஃபேக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவையும் மிகவும் வேகம் குறைந்தது.
இதிலும் மிக முக்கியமாக இந்த நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவது விலை அதிகம். யாராவது ஒரு மணி நேரம் வைஃபை பயன்படுத்த விரும்பினால், அவர்கள் சுமார் 100 எரிட்ரியன் நக்ஃபாவை செலுத்த வேண்டும், இது இந்திய மதிப்பில் 100 ரூபாய்க்கு மேல்.
இங்குள்ள பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான மக்களால் இணையத்தில் இவ்வளவு செலவு செய்ய முடியாது. இதனால்தான் பலர் இணையத்தைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றனர்.
ஏடிஎம் போன்ற வசதிகள் இல்லை
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, ஏடிஎம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த வசதிகள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவானவை மற்றும் மக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன, ஆனால் எரித்திரியாவில், ஏடிஎம் இல்லை.
பழைய பாரம்பரிய வழியில் வாழ்வது
எரித்திரியாவில் இணையம் இல்லாதது, உலகின் சில பகுதிகளில், இணையமும் நவீன தொழில்நுட்பமும் இன்னும் சாதாரண மக்களைச் சென்றடையவில்லை என்பதைக் காட்டுகிறது.
இந்த நாடு டிஜிட்டல் உலகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், இங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு இணையத்தையோ அல்லது சமூக ஊடகங்களையோ சார்ந்து இல்லை, மேலும் அவர்கள் பழைய பாரம்பரிய முறைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
