மாவே இல்லாமல் ஷப்பாத்தி செய்யணுமா? இந்த இரண்டு பொருள் போதும்
மாவு மற்றும் ஈஸ்ட் சீனி பயன்படுத்தாமல் அதிக சத்துக்கள் நிறைந்த ஷப்பாத்தி செய்முறையை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அதிக சத்துக்கள் நிறைந்த ஷப்பாத்தி
பொதுவாக இரவு உணவாகவும் உடல் எடை குறைக்கவும் மக்கள் ஷப்பாத்தி சாப்பிடுவது வழக்கம். இந்த ஷப்பாத்தி மைதா மா மற்றும் வேறு மாவுகளை வைத்து செய்வார்கள்.
இது ஆரோக்கியமான உணவும் கூட. ஆனால் ஷப்பாத்தியை அதிக சத்துக்கள் நிறைந்ததாக செய்ய முடியும். இதற்கு கீரை மற்றும் ஓட்ஸ் இருந்தால் போதும். பதிவில் கீரை மற்றும் ஓட்ஸ் வைத்து சத்து நிறைந்த ஷப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ் - 2 கப்
- பசளிக்கீரை - 60 கிராம்
- கொத்தமல்லி கீரை - 20 கிராம்
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - ஒரு பல்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்மறை
முதலில் ஓட்ஸ் எடுத்து அதை மிக்ஸியில் போட்டு நன்றாக மாவு பதத்திற்கு அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் அதில் பசளிக்கீரை மற்றும் கொத்தமல்லி கீரை அதனுடன் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
இப்போது அரைத்து வைத்துள்ள ஓட்ஸ் மாவில் அரைத்து வைத்துள்ள கீரையை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எடுக்க வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்து அதை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கலாம்.
இதன் பின்னர் மாவை எடுத்து அதை சம அளவிற்கு உருட்டி எடுத்து சப்பாத்தி வடிவத்தில் வட்டமாக சுட்டு எடுத்துக்கொள்ளலாம். இது அதிக சத்துக்கள் நிறைந்த ஷப்பாத்தி. இதை குருமா சட்டி சாம்பார் என உங்களுக்கு பிடித்த சைட்டிஷ் வைத்து சாப்பிடுங்கள்.
ஓட்ஸின் நன்மைகள் - ஓட்ஸின் முக்கிய நன்மைகள், கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், செரிமானத்திற்கு உதவுதல், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுதல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்றவை ஆகும். ஓட்ஸ் ஒரு சத்தான முழு தானியம் என்பதால், இது இரும்பு, மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு சிறந்த உணவாகும்.
கீரையின் நன்மைகள் - கீரை வகைகள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் (A, C, K, ஃபோலேட்) மற்றும் தாதுக்களை (இரும்பு, கால்சியம், மெக்னீசியம்) அதிகளவில் கொண்டுள்ளன.
இதனால் கீரைகளை உண்பதால், செரிமானம் மேம்படும், இரத்த சோகை தடுக்கப்படும், எலும்புகள் வலுப்பெறும் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
