ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹாலிவுட் நடிகராகவே மாறிப்போன நிழல்கள் ரவி- வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980 ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில் தன்னுடைய நடிப்பு வாழ்கையினைத் தொடங்கியவர் நிழல்கள் ரவி.
இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியினை அளித்திருந்தாலும் இவர் ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. ஆனாலும், தொடர்ந்து நிழல்கள் ரவி நடித்து வந்தார்.
நாயகன், வேதம்புதிது, சின்ன தம்பி பெரிய தம்பி, மறுபடியும் அண்ணாமலை மற்றும் ஆசை போன்ற திரைப்படங்களில் அவர் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார்.
அத்துடன் நிறைய தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வந்தார். மேலும், இவர் பல படங்களுக்கு கொடுத்த டப்பிங் வாய்ஸ் ரசிகர்களிடையே எப்பொழுதும் வரவேற்பை பெற்றிருக்கும்.
இந்த நிலையில், தற்போது நிழல்கள் ரவி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹாலிவுட் நடிகரை போல படு ஸ்டைலாக உடை அணிந்து மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.