எனக்கு அழைப்பு வந்திருக்கிறது! பிக் பாஸ் வரும் நிழல்கள் ரவி? அவரே கொடுத்த சர்ப்ரைஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிழல்கள் ரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்கி வருபவர் நிழல்கள் ரவி. அவர் சமீபத்தில் வெளிவந்த டிக்கிலோனா படத்தில் நடித்து இருந்தார்.
கேஜிஎப் படம் போல படத்தின் கதை சொல்லும் கதாப்பாத்திரமாக காட்டிவிட்டு, அவரை மனநிலை சரியில்லாதவர் போல காமெடியாக சித்தரித்து இருப்பார் இயக்குனர்.
படத்தில் சிறிய ரோல் என்றாலும் அவரது நடிப்புக்கும் குரலுக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நிழல்கள் ரவி பிக் பாஸ் 5க்கு போட்டியாளராக வர போகிறார் என செய்தி பரவி வந்த நிலையில் அது பற்றி அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
“பிக் பாஸ் அழைப்பு எனக்கு வந்திருக்கிறது. நான் வருகிறேனா என்பது சஸ்பென்ஸ். அதை வெளியில் சொல்ல கூடாது என சொல்லி இருக்கிறார்கள்” என நிழல்கள் ரவி தெரிவித்துள்ளார்.
you may like this...