வெளியே வந்ததும் வினுஷா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன்... நிக்ஷன் அதிரடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக இருக்கும் நிக்ஷன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும், வினுஷாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் தலைவராக இருக்கும் நிக்ஷன் சில வாரங்களுக்கு முன்பு வினுஷாவின் உடம்பு அமைப்பை மோசமாக சித்தரித்து பேசியுள்ளார்.
இவற்றினை பிக் பாஸ் சமீபத்தில் டாஸ்க் ஒன்றின் மூலம் மீண்டும் வெளியே கிளறியுள்ளது. இந்நிகழ்வினை வினுஷா வெளியேறிய பின்பே அவதானித்துள்ள நிலையில், மிகவும் மனம் வருந்தி பேட்டி கொடுத்திருந்தார்.
தம்பி மாதிரி பழகிய நிக்ஷன் இவ்வாறு பேசியது மன்னிக்கவே முடியாது என்று கூறினார். தற்போது நிக்ஷன் திடீரென சரவணனிடம் வெளியே சென்றதும் முதல் வேலையாக வினுஷாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
NIXEN- I want to ask apology to Vinusha by Falling her legs ?
— Troll Mafia (@offl_trollmafia) November 27, 2023
Finally Nixen Understand what he did#biggbosstamil #biggbosstamil7 #Nixen #Vichitra #VJArchana #VijayVarma #BiggBossTamilSeason7 #BiggBoss7Tamil pic.twitter.com/Bu5y7WzVJA
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |