பிக் பாஸில் தலைகீழாக மாறிய பூர்ணிமாவின் நிலை... தேம்பி தேம்பி அழுத காட்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பூர்ணிமா தேம்பி தேம்பி அழும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் நேரடி நாமினேஷன் வைக்கப்பட்ட நிலையில், மாயா பூர்ணிமாவை நேரடியாக நாமினேஷன் செய்துள்ளார்.
மேலும் வீட்டில் பூர்ணிமாவை அனைவரும் டார்கெட் செய்துவரும் நிலையில், சோகம் தாங்க முடியாமல் பூர்ணிமா பயங்கரமாக கதறி அழுதுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |