பிக் பாஸில் பிரதீப்க்கு ரெட் கார்டு... இதனை வெளியில் காட்டவில்லை! நிக்ஷன் கூறிய உண்மை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கும் என்ன நடந்தது என்பதை நிக்ஷன் வெளியில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிக்ஷன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை போட்டியாளரான நிக்ஷன் கொடுத்துள்ள பேட்டி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதீப் மீது உரிமைகுரல் தூக்கிய குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள நிக்ஷன் கூறுகையில், பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது பெரிய தப்பு என்று பலர் வெளியே பேசி கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் உள்ளே இருந்து வெளியே வந்த பலரும் பிரதீப் நல்லவர் என்று கூறுகின்றனர். ஆனால் பிரதீப் என்னவெல்லாம் செஞ்சாருன்னு எனக்கு தான் தெரியும்.
அதில், நாங்கள் எந்த இடத்திலுமே பிரதிபால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லவில்லை என்றும் அங்கே அத்தனை கேமரா இருக்கிறது. ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செய்யும் செயல் தான் சரி இல்லை என்று கூறினோம்.
நாங்க உரிமை குரல் தூக்கி பிரதீப் மீது கம்ப்ளைன்ட் சொன்னதும் கமல்ஹாசன் நான் உள்ளே போய் பேசிட்டு வந்து பதில் கூறுகிறேன் என்று சென்றார்.
அன்று மட்டும் 1.30 மணி நேரம் பிரேக் விட்டதாகவும், பிக் பாஸ் வீட்டில் இதுவரை அவ்வளவு நேரம் பிரேக் விட்டது இல்லை... கமல் உள்ளே சென்று பிரதீப் நடந்து கொண்ட விதத்தை பார்த்துவிட்டு, பிரதீப் குறித்த சில விடயங்களை வெளியே ஒளிபரப்பு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |