அமெரிக்க நகரத்துடன் ஒப்பந்தமிட்ட கைலாசா! மாஸ் காட்டிய நித்தியானந்தா
கைலாசா நாட்டை அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து ஒப்பந்தத்துடன் கையெழுத்திட்டுள்ளதாக நித்தியானந்தா கூறியுள்ளார்.
நித்தியானந்தா
பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்த காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இந்தியாவில் இவர் மீது பல வழக்குகளும் இருக்கின்றது.
இவர் மீது அதிகமான புகார்கள் குவிய தொடங்கியதால், நாட்டில் இருந்தே வெளியேறிய இவர், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியதோடு, சில காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதுவரை இவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாமல் இருந்த பக்தர்களுக்கு கைலாசா என்ற தனி தீவில் இருப்பதாக தெரியவநதது. சமீபத்தில் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், பின்பு அவர் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியளித்தது.
அமெரிக்க நகரத்துடன் ஒப்பந்தம்
கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் கடந்த 11ம் தேதி அங்கீகரித்து இருப்பதாக நித்தியானந்தா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரித்துள்ளது அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம். மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.