நித்தியானந்தாவின் அடுத்த அதிரடி! கைலாசாவில் வேலைக்கு ஆட்கள் தேவை: தீயாய் பரவும் விளம்பரம்
நித்தியானந்தா வசிக்கும் கைலாசா நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பரபரப்பை கிளப்பியுள்ளது.
நித்தியானந்தா
பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்த காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இந்தியாவில் இவர் மீது பல வழக்குகளும் இருக்கின்றது.
இவர் மீது அதிகமான புகார்கள் குவிய தொடங்கியதால், நாட்டில் இருந்தே வெளியேறிய இவர், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியதோடு, சில காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் எங்கே இருக்கிறார்? என்ற தகவல் கூட தெரியாமலும், உயிருடன் இல்லை என்ற தகவலும் பரவியது.
வேலைக்கு ஆட்கள் தேவை
இந்நிலையில் தான் வசிக்கும் கைலாசா நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு ஒன்றினை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
எலட்ரானிக், பிளம்மிங் பணிகளுக்கும், தூதரக பணிகளுக்கு ஆட்கள் தேவை என்றும், சம்பளத்துடன் கூடிய பயிற்சி கொடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.