மகளுடன் அசிங்கமாக பேசிய ஆடியோ இருக்கு...! வேஷம் போடும் பாலாஜியின் முகத்திரையை கிழிக்கும் இரண்டாவது மனைவி!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்து கொண்டுள்ள நிலையில், மகளுடன் அவரின் இரண்டாவது மனைவி நித்யா அதிரடி காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனது மகளுடன் லைவிற்கு வந்த நித்யா, "பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
இதை பற்றி பேசவேண்டிய கட்டாயம் இருக்கு. இனிமேலும் என்னைப்பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜ் வெளியிடுவேன்." என மிரட்டி உள்ளார்.
#ThaadiBalaji Wife #Nithya Accused #Balaji #BiggBossUltimateTamil pic.twitter.com/SPcVqdv7wS
— chettyrajubhai (@chettyrajubhai) February 3, 2022
"எனது மகளை மிகவும் அசிங்கமாக தாடி பாலாஜி திட்டி இருக்கும் ஆடியோ என்னிடம் இருக்கிறது. குடிச்சிட்டு அவருடைய டிரைவரை வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்து, அவர் அருகில் சிரித்து மகிழ்ந்த ஆடியோவும் என்னிடம் இருக்கிறது.
பிக் பாஸில் அப்படியே பாசக்கார தந்தை போல நடிக்கிறார் என விளாசி தள்ளி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.