கொரோனா நுரையீரலுக்கு செல்லாமல் இருக்க வேண்டுமா? நித்தியானந்தாவின் அட்டகாசமான ஐடியா
கொரோனா தொற்று நுரையீரலுக்கு சென்றடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நித்தியானந்தா கூறியுள்ள தீர்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சர்ச்சைகளுக்குப் பெயர் போன சாமியார் நித்தியானந்தா பாலியல் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக உள்ள நிலையில், பொலிசார் அவரைத் தேடி வருகின்றனர்.
ஆனல் நித்தியானந்தா தனக்கென்று கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியிருப்பதோடு, தனக்கென தனி கரன்சி, தனி நாடு அந்தஸ்து கோரி ஐநாவிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறி வருகின்றார்.
தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றினால் லட்சக்கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர். முதல் அலை முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள் மிகத் தீவிரமாக பரவி வருகின்றது.
சீனாவில் ஆரம்பித்ததாக கூறப்பட்டும் இந்த தொற்றினை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகள் திணறி வருகின்றது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் நித்தியானந்தா காணொளி மூலம் வெளியிட்டுள்ள கருத்து மக்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவை விரட்டுவதற்கு பல யோசனைகளை நித்தியானந்தா கூறியுள்ளார். அதிலும் கொரோனா நமது நுரையீரலுக்குள் நுழையாமல் கேட் போடுவதற்கு என்ன செய்யலாம் என்பதைக் கூறியுள்ளார்.
ஆன்ம லிங்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செயுங்கள். கொரோனா உங்களை நெருங்காது, அத்துடன் நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட பாலும், நீரும், வேம்பு ரசமும் கரும்பூஞ்சை நோய்க்கு மருந்து என்றும் கூறியுள்ளார்.
கொரோனாவின் பயம் ஒருபுறம் மக்களை சோகத்தில் ஆழ்த்தி வந்தாலும், தற்போது நித்தியின் கருத்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.