கேவலமா இருக்கு! தேவையில்லாமல் பண்ணாதே: போஷிகாவுடன் நித்யா வெளியிட்ட புகைப்படம்! சரமாரியாக பேசிய ரசிகர்கள்
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தனது மகளுடன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது.
பிரபல ரிவியில் நடுவராக வலம் வரும் தாடி பாலாஜி, ஒரு காலத்தில் வடிவேலுக்கு நிகராக கொமடி நடிகராக கலக்கி வந்தார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இருவரும் விவாகரத்து வரை சென்று பயங்கர சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவரது மகள் போஷிகா, மனைவி நித்யாவுடன் இருந்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், வெளியில் சென்று பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீப நாட்களாக மகளுடன் டிக் டாக் செய்து அசத்தி வரும் நித்யா, தற்போது மகளுடன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் சிலர் பாராட்டி வந்தாலும், பலர் கடுப்பில் கேவலமாக திட்டி வருகின்றனர். ரசிகர் ஒருவர், கேவலமா இருக்குது, தயவு செய்து பாலாஜி கூட சேர்ந்த வாழுமா... தேவை இல்லாத பண்ணாத... அவர் போஷிகாவை மிஸ் பண்ணுவார் என்று கூறியுள்ளார்.
இதற்கு நித்யா முதலில் உனது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வினைப் பாரு என்று சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
[