மீண்டும் காணொளியை வெளியிட்ட நித்யா: அம்மாவை மிஞ்சிய மேக்கப்பில் போஷிகா செய்த காரியம்! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தனது மகளுடன் தற்போது வெளியிட்டுள்ள டிக்டாக் காட்சி வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் நடுவராக வலம் வரும் தாடி பாலாஜி, ஒரு காலத்தில் வடிவேலுக்கு நிகராக கொமடி நடிகராக கலக்கி வந்தார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இருவரும் விவாகரத்து வரை சென்று பயங்கர சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவரது மகள் போஷிகா, மனைவி நித்யாவுடன் இருந்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், வெளியில் சென்று பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நித்யா தனது மகளுடன் டிக்டாக் செய்யும் காணொளிகளை வெளியிட்டுவருகின்றார். அதில் போஷிகா பயங்கரமாக வளர்ந்ததுடன், தனது அம்மாவிற்கு நிகராக நடிப்பில் அசத்தி வருகின்றார்.