ரூ.451 கோடியில் வைர நெக்லஸ்... மருமகளுக்கு பரிசளித்த நீதா அம்பானி!
முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர், உலகளவிலும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
Mukesh Ambani, Nita Ambani, Akash Ambani, Isha Ambani, Anant Ambani மற்றும் Shloka Mehta என ஒட்டுமொத்த அம்பானியின் குடும்பமே ராஜவாழ்க்கை வாழ்கின்றனர், இதற்கு சான்றாக பல சம்பவங்களை குறிப்பிடலாம்.
ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்த கோடிகளில் செலவு செய்து பரிசுகளை வழங்குவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி, 2019ம் ஆண்டு தனது மருமகள் Shloka Mehtaவுக்கு, ரூ.451 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை பரிசளித்துள்ளார் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி.
உலகிலேயே விலை மதிப்புமிக்க இந்த நெக்லஸில் மட்டும் 91 வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாம்.
2007ம் ஆண்டு காதல் மனைவியின் 44வது பிறந்தநாளுக்காக முகேஷ் அம்பானி, சொகுசு ஜெட் ஒன்றை பரிசளித்தார், இதன் மதிப்பு மட்டுமே 240 கோடியாகும்.
சமீபத்தில் தீபாவளி பரிசாக 10 கோடி மதிப்பில் நீதா அம்பானிக்கு, Rolls-Royce Cullinan Black Badge SUVயை வழங்கினார், இது இந்தியாவின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகும்.
கடந்தாண்டு ஜனவரி 19ம் திகதி, தனது இளைய மகனின் நிச்சயார்த்த தினத்தன்று 18K Panthere De Cartier Brooch யை பரிசாக வழங்கினார், இதன் விலை 13,218,876 ரூபாயாகும்.
இதுமட்டுமின்றி சுமார் 5 கோடி மதிப்பில் கார் ஒன்றையும் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.