பேராசிரியராக நியமிக்கப்பட்ட நீடா அம்பானி.. அதிரடியான விளக்கம் அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்!
இந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கபட்டுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் குழு தலைவர் முகேஷ் அம்பானி. இவரின் மனைவி நீடா அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்டிரியின் நிர்வாக இயக்குநராகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் நீடா அம்பானி இருந்துவருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, நீடா அம்பானியின் சார்பாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்படுகிறார் என பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது.
மேலும், இதுவரை எந்த பல்கலை கழகத்திலிருந்தும், சிறப்பு பேராசிரியராக பணிபுரிய எந்த அழைப்பும் வரப்பெறவில்லை' எனக் கூறியுள்ளனர்.