கறி கடையில் தொடங்கிய நிஷாவின் வாழ்க்கை... தந்தையால் தீபாவளியை வெறுத்த சோகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்பினை தவிடுபொடியாக்கியவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் பொதுநலத்தில் அதிக அக்கறை கொண்டவர் மட்டுமின்றி பட்டிமன்ற பேச்சாளரும் கூட... உண்மையை உறக்கக்கூறும் இவரின் பேச்சு ரசிக்கும்படியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இவரது எதுகை, மோனை பேச்சிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் வந்த பின்பு மிகவும் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. ஆம் இவர் அர்ச்சனா, ரியோ கூட்டணியில் சேர்ந்து அவர்களுக்கு சப்போர்ட் செய்து விளையாடி வந்தார்.
இந்நிலையில் நிஷாவின் பேச்சு காணொளி தீயாய் பரவி வருகின்றது. தந்தை மீது பிள்ளைகளின் பாசத்தினை அருமையாக விளக்கியதோடு, தான் கடந்து வந்த பாதையினையும் அழகாக கூறியுள்ளார்.