படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை: வெளியான புகைப்படம்
பாக்கியலட்சுமி சீரியல் நடிகையுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபலத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றது.
நடிகை நிரோஷா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்த ராதிகாவை தொடர்ந்து சினிமாவிற்கு நுழைந்தவர் தான் நடிகை நிரோஷா.
இவர் “அக்னி நட்சத்திரம்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சூரசம்காரம், செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், பாண்டிய நாடு, தங்கம், உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இப்படியொரு நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்த ராம்கியை காதலித்து 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். ராம்கி சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நிரோஷா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஸ்டாலினுக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இந்த தொடரும் பாக்கியலட்சுமி தொடரும் இணைந்து மகாசங்கமம் நடந்து கொண்டிருப்பதால் தன்னுடைய 53-ஆவது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |