பக்கா பிளான்! அதிரடி திருப்பம்....2வது ஃபைனலிஸ்ட்டாகிய நிரூப்! பரிதாப நிலையில் பாவனி....
சிபி பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில் இந்த வாரம் நிரூப் தான் எவிக்ட் ஆவார் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
பிக் பாஸ் டீம் புதிய பிளானை போட்டு இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக நிரூப்பை கடைசி வாரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
பாவனியை ஃபைனல்ஸ் அனுப்ப வேண்டும் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் முடிவு செய்த நிலையில், பாவனியை வெளியேற்ற முடிவு கட்டிய நிரூப் கடைசி வரை ஒத்துழைக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் டஃப் போட்டியாளராக பார்க்கப்பட்ட நிரூப் தற்போது தனது ஸ்ட்ராட்டஜியின் மூலமாக கடைசி வாரத்திற்குள் இரண்டாவது நபராக உள்ளே நுழைந்து விட்டார்.
ஆனால், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் கழுவி ஊற்றி நிரூப்பை ஃபைனல்ஸுக்கு அனுப்பிய அவமானம் தேவையா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
நிரூப் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாவனி வெளியேற போவது உறுதியாகி விட்டது.
தாமரைக்கு மக்கள் சப்போர்ட் அதிகரித்து வரும் நிலையில், பாவனி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகி வெளியேற போகிறார் என தெரிகிறது.
பாவம் பாவனி ஆர்மியினர் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.