அபிராமி இப்போ மாறிவிட்டார்! காதலை பற்றி உருக்கமாக பேசிய நிரூப்; ஆடிப்போன பார்வையாளர்கள்;
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிரூப் நடிகை யாஷிகாவின் முன்னாள் காதலர் என கூறப்பட்டது. இருவரும் பின்பு சில கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டோம் எனவும் கூறியிருந்தார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது நாமினேஷனின் போது பேசிய அபிராமியை நாமினேட் செய்த நிரூப் பிராமியுடன் சில காலம் முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், அப்போது இருந்த அபிராமிக்கு இப்போது இருக்கும் அபிராமிக்கு நிறைய வித்தியாசம் இருப்பதாக உணர்வதாக கூறி நாமினேட் செய்துள்ளார்.
மேலும், இந்த மாறுதலுக்காக நான் அவரை நாமினேட் செய்கிறேன் என்றார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நிரூப் மற்றும் அபிராமி இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகத்தளங்களில் வைரலானது.