சொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா? உண்மை தகவல் இதோ
பிரபல செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார் என்று தீயாய் பரவிய தகவலுக்கு தற்போது உண்மை நிலை என்ன என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் கே.வி.ஆனந்த், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, நடிகர் நிதிஷ் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், 90s ல் பிரபல செய்தி வாசிப்பாளராக வலம் வந்த நிர்மலா பெரியசாமி, கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தீயாய் தகவல்கள் பரவி வந்தது.
இது முழுக்க முழுக்க வதந்தி என செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவர் பிரபுதாசன் தெரிவித்துள்ளார். இது போல் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.