அம்பானிக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவில் 252 கோடிக்கு வீட்டை வாங்கிய நீரஜ் பஜாஜ்!
இந்தியாவில் 252 கோடிக்கு ஆடம்பர வசதிகள் கொண்ட அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கியிருக்கிறார். மேலும், இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு என்ற சாதனையையும் படைத்துள்ளது.
நீரஜ் பஜாஜ் வாங்கிய ஆடம்பர வீடு
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் தான் நீரஜ் பஜாஜ். இவர் மும்பையில் மலபார் ஹில் பகுதியில் ஆடம்பர கட்டிடத்தில் ஆடம்பர டிரிப்பிளெக்ஸ் பென்ட்ஹவுஸ் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
இந்த ஆடம்பர வீட்டின் விலையானது 252.50 கோடி ரூபாயாகும். மேலும், இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனை ஆன ஆடம்பர வீடு இதுவாகும்.
இந்த ஆடம்பர வீட்டை லோதா குரூப் நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருக்கிறார். அவர் வாங்கிய இந்த அபார்ட்மென்ட் சொகுசு குடியிருப்பு கட்டினமான லோதா மலபார் இன் 29, 30 மற்றும் 31வது தளங்களில் அமைந்துள்ளது.
இது கவர்னர் தோட்டத்திற்கு எதிரே உள்ள வாக்கேஷ்வர் சாலையில் அமைந்துள்ளது. மேலும் லோதா மலபார் கட்டிடத்தின் ஒரு பக்கம் அரபிக் கடல் மறு பக்கம் தொங்கும் தோட்டம் இரண்டையும் தொடும் வகையில் அமைந்துள்ளது.
இதில் சுமார் 8 கார்களை நிறுத்தும் வகையில் பார்கிங் இடமும் பெற உள்ளார். லோதா மலபார் கட்டிடம் சுமார் 1.08 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.