முத்துராசுவை சுட்டுக் கொன்றது யார்? ப்ரொமோவில் வெளியான உண்மை
பிரபல ரிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்தரசனை சுட்டது யார் என்பது குறித்து பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தால் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை சீரியல் திருப்பியுள்ளனர்.
திரைப்படங்களில் கொலை எதும் நடந்தால், அதில் அடுத்த சில நிமிடங்களில் கொலையாளி யார் என்பது தெரிந்துவிடும். ஆனால் சீரியலில் அப்படி இல்லை.
சீரியல் எபிசோடுகளாக சில ஆண்டுகள் ஒளிபரப்பாகும் என்பதால், அதில் ஒரு மர்மமான சம்பவம் நிகழும்போது, அதை யார் எதற்காக செய்தார் என்பது தெரிய குறிப்பிட்ட சில வாரங்கள் ஆகலாம்.
அதுவரை ரசிகர்கள் அந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தங்களது யூகங்களை பகிர்ந்து வருவார்கள். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களும் இதே நிலையில் தான் உள்ளனர்.
மாயனின் கடைசித் தங்கை ஐஸ்வர்யாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட முந்தரசன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஐஸ்வர்யாவின் ஆபாசப் படங்களைக் எடுத்து வைத்துக்கொண்டு அதை காட்டி மிரட்டி வந்தார்.
இதனால் சீரியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் உயர்வை சந்தித்து வந்தது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்தை இந்த சீரியலின் இயக்குநர் கடந்த வாரம் வெளியிட்ட ப்ரொமோவில், முத்தரசனை சுடுவது போன்ற காட்சிகளை வைத்து மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார்.
முத்தரசனை சுட்டது சந்தோஷம் என்றாலும், அவரை சுட்டது யார் என்பது குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாலும், நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த கேள்விக்கான பதில் இந்த வார எபிசோட்டில் கிடைக்காது என்பதற்கு இந்த வார புரோமோவே பதில் சொல்லிவிட்டது என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கின்றது.
குறித்த வழக்கை விசாரிக்க பொலிசார் ஒருவர் வந்த நிலையில் சற்று விறுவிறுப்பு கூடியுள்ளது. ஐஸ்வர்யா தான் முத்துராசுவைக் கொன்றார் என்றால், இப்படி செல்போனைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் வைத்து காலிங்பெல்லை அடிக்க வாய்ப்பில்லை.
மாயனும், கத்தியும் தனது மனதிற்குள் பேசிவரும் நிலையில் யார் அவர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.
இதனால் மீதம் இருக்கும் ஐஸ்வர்யாவின் அம்மா, அக்கா சரண்யா மற்றும் மகா தான். இதில் இந்த சம்பவத்திற்கும் மகாவுக்கு தான் அதிக தொடர்வு இருப்பது போல காட்சிகள் உள்ளது.
இதேபோல், காயத்ரி தான் முத்துராசுவைக் கொன்றிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனது தங்கையின் வாழ்க்கை முத்துராசுவிடம் சிக்கிக் கொண்டதே என்ற கோபத்தில் இருந்த இவர், முத்துராசுவைத் தானே கட்டியிருக்கலாம் என்று சிந்தித்து வந்தார். இதனால் தான் அவர் மீது சந்தேகம் வலுக்கிறது.
ஐஸ்வர்யா காலிங்பெல் அடித்ததும் கதவைத் திறந்து, அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது, இதற்குத் தான் காத்திருந்தேன் என்பது மாதிரி வந்து பேசுகிறார் காயத்ரி.
மேலும் செல்போனை எடுத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி என என ஐஸ்வர்யா அழுகும் காட்சிகளில், மாயன், கத்தி, ஐஸ்வர்யாவின் அம்மா, சரண்யா என எல்லோரும் ஏதேதோ சமாதானம் சொல்ல, காயத்ரி மட்டும் அமைதியாக நிற்கிறார். இதில் இருந்தே அவர் மீது சந்தேகம் வலுக்கிறது.
மேலும் ஐஸ்வர்யா அந்த செல்போனை என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே காயத்ரி அதை தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார். இதனால் அவர் தான் முத்தரசனை சுட்டிருக்க வேண்டும் என்பது ஓரளவிற்கு உறுதியாக கூறலாம். இந்த சம்பவம் எந்த சூழ்நிலையில் நடந்தது? ஏன் நடந்தது? என்பதை எல்லாம் வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.