இரவில் தலைக்கு குளிப்பது நல்லதா? இனி இந்த தவறை செய்யாதீங்க
இரவில் தலைக்கு குளிப்பது ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படுத்துமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரவில் தலைக்கு குளிப்பது
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்களது அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பின்பு தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இவை புத்துணர்ச்சி அளிப்பதாக நினைத்திருக்கும் நிலையில், நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும் என்றும் எண்ணி வருகின்றனர்.
ஆனால் இரவில் தலைக்கு குளித்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பாதிப்பு என்ன?
இரவில் தலைக்கு குளிப்பதால் தலைமுடி சேதப்படுவதுடன், முடி உதிர்வுக்கு காரணமாகவும் அமைகின்றது என்கின்றனர் நிபுணர்கள். ஆதலால் இரவில் தலைமுடியை அலசுவதை தவிர்க்க வேண்டுமாம்.
தலைக்கு குளித்துவிட்டு இரவில் அப்படியே தூங்கச் செல்வதால், எளிதில் உடைந்து விடுவதுடன், முடியின் வேர் கால்களை பாதுகாக்கும் வேர்களின் கெரட்டின் செதில்கள் தளர்ந்து, பாதுகாப்பு தடை மற்றும் பலவீனம் அடைகின்றது. இதனால் பொடுகு தொல்லையும் ஏற்படும்.
பொதுவாகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின் அதிக முடி உதிர்வை நாம் காண்கிறோம். ஈரமான முடியுடன் படுக்கைக்கு செல்வதால், முடிகளில் நார்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, முடி உதிர்வையும் தடுக்கின்றது.
அதிக ஈரப்பதம் மற்றும் ஈரமான இழைகள் காரணமாக தலைமுடி இரவிலேயே வழுவழுப்பானதாக மாறிவிடும். அடுத்த நாள் அது பிசுபிசுப்பாக இருப்பதுடன், கூந்தலின் பளபளப்பு இல்லாமல் போய்விடும்.
ஈஸ்ட் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவற்றுக்கும் உடனடியாக வழிவகுக்கும். இந்த ஈரப்பதம் பூஞ்சைகள் மற்றும் சிறிய பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தும். ஆதலால் காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவது மிகவும் சிறந்ததாகவும்.
அவ்வாறு இல்லையெனில் இரவில் தலைக்கு குளித்தால் முடியில் ஈரப்பதம் இல்லாத அளவிற்கு நன்றாக உலர்ச்சிய பின்பே படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |