இரவு நேரத்தில் தூங்காமல் வேலை பார்ப்பவரா நீங்கள்? மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாம்
மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக இரவு தூங்காமல் விழித்திருப்பது ஒன்றாக இருக்கின்றது.
தூங்காமல் இருந்தால் மாரடைப்பு
இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது அனைத்து வயதினரையும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இளம் வயதினர் கூட மாரடைப்பினால் உயிரிழந்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் தூங்காமல் வேலை செய்பவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகின்றதாம்.
மேலும் இரவு நேரத்தில் வேலை செய்வதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதால், இரவு நேர வேலையை குறைத்துக் கொள்வது நல்லது.
ஒருநாள் மட்டும் இரவு வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதில்லை. அதுவே தொடர்ந்து இரவு வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.
இரவு நேரத்தில் தூக்கம் விழிப்பதும் மனதில் எதிர்மறையான ஆற்றல் வெளிப்படுவதுடன், உடல் மற்றும் மனது சோர்வடையும் இதனால் வேலை பார்ப்பதில் சில தடுமாற்றம் ஏற்படும்.
எனவே இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் அந்த வேலையை தவிர்த்து விட்டு பகலில் வேலை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |