அலுவலகத்தில் இரவு நேரம் வேலை செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சில ஆலோசனைகள்
தற்காலத்தில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
விலைவாசிகள் அதிகரிப்பு, குடும்பச் சூழல், எதிர்காலத்தை குறித்த பயம் என்பன மக்களை நேரம் காலம் பார்க்காமல், இரவு பகல் என்று நினைக்காமல் வேலை பார்க்க வைக்கிறது.
பகல் வேளையில் வேலை பார்ப்பது என்பது சாதாரண விடயம். அதில் உடல் நலப் பிரச்சினைகள் வருவது மிகவும் குறைவு. ஆனால், இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலக் கோளாறுகள் என்பன அதிகமாகவே ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.
மாரடைப்பு
உறக்கம் இல்லாமல் வேலை பார்க்கும் காரணத்தால் இரத்தம் அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகின்றது.
சர்க்கரை நோய் பாதிப்பு
இரவில் தொழில் புரிந்து பகல் நேரத்தில் உறங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
மார்பக புற்றுநோய்
இரவு நேரம் தொழில் புரியும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.
உடல் சோர்வு
மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுவதால் உடலும் மனமும் சோர்வடையும்.
உறக்கமின்மை
எவ்வாறிருப்பினும் இரவைப் போல் பகலில் ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லமுடியாது.
குடல் பிரச்சினை
அல்சர், இரைப்பை, வயிற்றுப்போக்கு சம்பந்தமான பிரச்சினை ஏற்படும்.
இதுபோன்ற பல உடல் சார்ந்த பிரச்சினைகள் இரவு நேரம் வேலை செய்வதால் ஏற்படுகின்றன.
இதை தவிர்த்துக்கொள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், பகலில் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லுதல், அதிகமாக நீர் அருந்துதல், எண்ணெய் உணவுகளை தவிர்த்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.