நீரிழிவு நோயாளிகளுக்கு அருமையான பால்... உடல்எடை, கொழுப்பும் கூட குறையும்
சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன.
ஒரு வகையான கார்போஹைட்ரேட் மற்றும் இது கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வெவ்வேறு வடிவங்களில் உள்ளது. மனித உடல் ஃபைபர் வளர்சிதை மாற்றமல்ல. எனவே, இது எந்த கூடுதல் கலோரிகளையும் சேர்க்காது.
ஃபைபர் உடலில் கேடாபொலிஸ் ஆகவில்லை என்பதால் அது இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்காது. எனவே, உயர் இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சோயா நல்ல ஊட்டச்சத்து ஆகும்.
சோயா சர்க்கரை அளவைக் குறைப்பதில் உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சோயா பாலில் உள்ள புரத சத்து மனித உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரத சத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் நலக் கோளாறு ஏற்படும் போது அதனை சீரமைக்க பல நன்மைகளை செய்கின்றது. அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோபிளவோன்ஸ் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன. இது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.
மெனோபாஸ் காலகட்டம்
மெனோபாஸுக்கு பிறகு பெண்களுக்கு , ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறைகிறது. அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை சோயா உணவுகளின் உட்கொள்ளல் தடுக்கிறது.
சோயா உட்கொள்வதன் மூலம் எலும்பு பலத்தை அதிகரித்து எலும்பு முறிவு அபாயத்தை குறைக்க, சோயா பாலில் உள்ள சோயா ஐசோபிளவோன்ஸ் உதவுகிறது.
புற்று நோயைத் தடுக்கிறது
சோயா பாலை அதிகம் உட்கொள்வதன் மூலம் ஆண்மை சுரப்பி புற்று நோய் தடுக்கப்படுகிறது. சோயா பாலை அதிகம் உட்கொள்ளும் ஆண்களுக்கு இந்த நோயின் பாதிப்புகள் தடுக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மார்பக புற்று நோய் பெண்களை பரவலாக தாக்குகின்றது. மெனோபாஸ் கால கட்டத்திற்கு பிறகு, அதிகமான சோயா பாலை எடுத்து கொள்வதால், சோயா பால் ஈஸ்ட்ரோஜனுக்கு ஒரு மாற்றாக இருப்பதால் மார்பக புற்று நோய் தவிர்க்கப் படுகிறது.
உடல் பருமன், கொலஸ்ட்ராலை குறைக்கிறது
சோயா உணவை எடுத்துக் கொள்வதால் வளர்சிதை மாற்றத்தால் ஆண்களுக்கும், மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இயல்பாகவே உடல் பருமன் ஏற்படுகிறது. சோயாவில் உள்ள ஐசோபிளவோன்ஸ் கொழுப்பிணியாக்கத்தை தடை செய்து, கொழுப்பு திசுக்கள் வளர்ச்சியை குறைக்கிறது.
ஆகவே சோயா பால் மற்றும் சோயா உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் கட்டுப்பட்டு, உடல் பருமன் சீராகி, சீரான இதய ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
சோயா உணவு கெட்ட கொலஸ்ட்ரால் என்னும் LDL அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் கூட்டுவதன் மூலம் மாரடைப்பைக் குறைக்கிறது.
குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.
குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் உயரும்.