சட்டுபுட்டுனு உடல் எடைய குறைக்கணுமா? அப்போ தினமும் இரவில் இதை குடிங்க!
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களில் பாதிக்கு மேற்ப்பட்டவர்கள் அதிகமான எடையால் அவஸ்தைப்படுகிறார்கள்.
மேலும் சிலர் டயட் என்ற பெயரில் விரும்பிய சாப்பாட்டை கூட சாப்பிட முடியாமல் இருக்கிறார்கள்.
இப்படியானவர்கள் சாப்பாட்டில் சில கட்டுபாடுகளையும், மூலிகை பொருட்களையும் சரியாக கடைபிடித்தால் எந்தவிதமான டயட்டும் இன்றி எடையை குறைக்கலாம்.
இதன்படி, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைக்கக்கூடியது கொள்ளு. இது சரியாக 3 நாட்களில் தேவையில்லா கொழுப்பு கரைத்து விடுகின்றது.
அந்த வகையில் கொள்ளை வைத்து எப்படி தேநீர் தயாரிப்பது? என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு- 50 கிராம்
பூண்டு- 2 பல்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மிளகு- ஒரு ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
பிளாக் சால்ட்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயில் கொள்ளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.
வறுத்தெடுத்தை தொடர்ந்து கொள்ளுடன் சேர்த்து அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
மிக்ஸிலிருக்கும் பொடியை தண்ணீர் இல்லாத போத்தலுக்கு மாற்றி அடைத்து வைக்கவும்.
இந்த கொள்ளு பொடியை இரவு தூங்கும் முன்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு பல் பூண்டை துருவி போடவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகு, சீரகம், கொள்ளுபொடி ஆகியவற்றை சேர்த்து கொஞ்சமாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கொள்ளு சூப் தயார்!
முக்கிய குறிப்பு
வாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது மூன்று நாள் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |