50 ஆண்டுகளில் இல்லாத அளவு.. பனியில் உறைந்து போன நயாகரா அருவி
அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது.
இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முக்கிய சுற்றுலாத்தளமான நயாகரா அருவி அதிர்ச்சியூட்டும் வகையில் பனியால் உறைந்திருந்தது. நயாகரா அருவிக்கு தெற்கே 25 மைல் தொலைவில் தாக்கிய பேரழிவு புயலின் பின்விளைவாக வான்வழி காட்சிகள் வெண்மையாக காணப்பட்டது.
நீர்முனைக்கு அருகில் இருந்த மலைகள் அடர்த்தியான பனியால் மூடப்பட்டிருந்தன.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.