ஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம்! இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா? தீயாய் பரவும் புகைப்படங்கள்
அமெரிக்காவில் நிகழும் கடும் பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் உறைந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. உலக அளவில் புகழ்பெற்ற மற்றும் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்று வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி.
கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா அருவியை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகின்றனர்.
தற்போது உலக அளவில் பருவநிலை மாற்றம் காரணமாக இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிலும் பல்வேறு மாகணங்களில் விநோதமான வானிலை நிலவி வருகிறது. மேலும், அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைப்பனியால் உறைந்து போன புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நயாகரா நீர்வீழ்ச்சி தொடக்கம் முதல் நீர் தேங்கும் இடம் வரை அனைத்தும் உறைந்திருப்பது பார்வையாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.