அடுத்தடுத்து சவாலாகும் எதிர்நீச்சல்.. தர்ஷினிக்காக ஜனனி எடுத்த அதிரடி முடிவு
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பயங்கர டுவிஸ்ட்டாக வந்து கொண்டிருக்கின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.
இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.
காரசாரமான விவாதங்கள், புது புது டுவிஸ்ட்கள் என எதிர்நீச்சல் இயக்குநர் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தர்ஷினியை யாரோ கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளனர். கடத்தியவர்களை அடித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்த தர்ஷினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜனனியின் முடிவு
இந்த நிலையில் சக்தியை கார் ஒன்று மோதி காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். இவர்களுக்கு ஆதரவாக ஆதிரை மருத்துவமனைக்கு வருகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷினியை எப்படியாவது கண்டுபிடித்து விடலாம் என ஜனனியும் மற்ற மருமகள்களும் களத்தில் இறங்கிய போது, ஜீவானந்தம் உதவிக்கு வருகிறார்.
ஆனால் அவரையும் பாதியில் உள்ளே வந்த பொலிஸார் கைது செய்து அழைத்து சென்று விட்டனர். ஜீவானந்தம் உதவி செய்வார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் இல்லை என நினைத்து ஜனனி ஒரு முடிவு எடுக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |