இப்படி பண்ணாதீங்க.. நிறத்தை வைத்து கலாய்த்தவர்களுக்கு பதிலடிக் கொடுத்த புதுமண தம்பதி
நிறத்தை வைத்து கலாய்த்த இணையவாசிகளுக்கு புதுமண தம்பதி கொடுத்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணம் என்பது இளைஞர்களுக்கு ஒரு புதிய ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.
அப்படியொரு நிகழ்வை வைத்து கலாய்த்த இணையவாசிகளுக்கு கணவன்- மனைவியாக இணைந்து தரமான பதிலடிக் கொடுத்துள்ளனர்.
இந்திய கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் காணொளியை எடுத்து, அதில் அவர்களின் நிறத்தை மையமாக வைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டனர்.
அதாவது மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார், அதே சமயம் அவருடைய மனைவி வெள்ளையாக இருக்கிறார். இதனை கருப்பொருளாக வைத்து நிறைய விமர்சகர்கள் இவர்களை கலாய்த்து பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.

தரமான பதில் கொடுத்த மாப்பிள்ளை
இந்த நிலையில், மிகுந்த மன வறுத்தத்துடன் தம்பதிகள் இணைந்து காணொளியொன்றை பகிர்ந்திருந்தனர். அதில், “ என்னுடைய உறவினர் ஒருவர் தான் ட்ரெண்டிங்கில் இருந்த காணொளியை என்னுடைய அம்மாவிற்கு அனுப்பினார். எங்களுடைய முக்கியமான நாளை வைத்து இப்படி நடந்தது எனக்கு வறுத்தமாக உள்ளது.
நாங்கள் இதுவரையில் நிறத்தை ஒரு பொருட்டாகவே நிகைக்கவில்லை. மீம்கள் வரும் பொழுது இதுவொரு விளையாட்டாகவே இருந்தாலும், இப்படி செய்வது தவறு. நாங்கள் கொண்டாட வேண்டிய தருணத்தை இப்படி சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக பார்த்த பொழுது அதிர்ச்சியாக இருந்தது..” என பேசியிருந்தார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது போன்று நடந்துக் கொள்வது ஒருவரின் மனதை எந்தளவு காயப்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |