திருமணம் முடிந்து தேனிலவுக்கு சென்ற தம்பதிகள்.. வாழ்க்கையே புரட்டி போட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம்!
இளம்பெண் ஒருவர் தேனிலவுக்கு சென்றபோது தனக்கு புற்றுநோய் இருப்பதை உணர்ந்த அதிர்ச்சியடைந்த சம்பவம் லண்டனில் நிகழ்ந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்தவர் சார்லோட் டுடுனி டக்கர்(27) என்ற பெண். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்ற போது அங்கு கேமிரான் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இந்த நிலையில், கடந்தாண்டில் டெக்ஸாஸில் சார்லோட் மற்றும் கேமிரான் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் தம்பதியால் உடனே லண்டனுக்குத் திரும்ப முடியவில்லை.
இதனால், கடந்தாண்டு இறுதியில் இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்து நியூ இங்கிலாந்துக்குச் சென்றார்கள். அப்போது மகிழ்ச்சியாக இருவரும் பொழுதைக் கழித்த நிலையில், அங்கு ஒரு நாள் சார்லோட் குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது மார்பில் ஏதோ கட்டி போல இருந்துள்ளது. அதைக்கண்டு பயந்து போயுள்ளார்.
உடனே, மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் எனக் கூறிய நிலையில், அந்த பரிசோதனைகளைச் செய்து விட்டு முடிவுக்காகக் காத்திருந்துள்ளார்.

இதன்பின்னர், சில நாட்கள் கழித்து சார்லோட்டின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தன. ஆனால் அந்த முடிவுகள் சார்லோட்யின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அந்த பரிசோதனை அறிக்கையில் சார்லோட்க்கு stage 2 invasive ductal carcinoma மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதைக் கேட்டு அவர் கணவருடன் மனம் நொறுங்கிப் போனார். அதன் பின்னர் அவர்கள் லண்டனுக்குத் திரும்பிய நிலையில் தொடர் சிகிச்சை மற்றும் ஆப்ரேஷன் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக சார்லோட் தனது சிகிச்சை நாட்கள் முழுவதையும் தனியாகவே கழித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சார்லோட், நான் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக குணமாகிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். நான் அனைத்து பெண்களுக்கும் சொல்வது ஒன்றுதான், ஏதாவது உடலில் மாற்றம் மற்றும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே தாமதிக்காமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏனெனில் அவர்கள் கண்டறியப்படாத புற்றுநோயுடனே வாழ வாய்ப்பு உள்ளது. அதனால் பரிசோதனை என்பது முக்கியம். நான் சந்தித்த கொடுமையை யாரும் சந்திக்கக் கூடாது'' எனக் தெரிவித்துள்ளார்.