முதலிரவு அறைக்கு சென்ற புதுமண தம்பதி! நீண்ட நேரம் திறக்காத கதவு... அதிர்ச்சியில் உறவினர்கள்
திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
முதலிரவு சென்ற தம்பதிகள்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் யாதவ்(22). இவருக்கு புஷ்பா (20) என்ற பெண்ணிற்கு இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 30ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து தம்பதிகளை உறவினர்கள் முதலிரவு அறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். காலையில் வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, புதுமண தம்பதி இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்ததையடுத்து, பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உறவினர்கள் முன்னிலையில் இருவரின் உடல்களும் ஒரே சிதையில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இருவருக்கும் இதய நோய் பிரச்னை எதுவும் இல்லாத நிலையில், இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.