வரவேற்பு நிகழ்ச்சியில் புதுப்பெண் கண்ட அதிர்ச்சி! திருமணமான ஒரேநாளில் கணவரை பிரிந்ததால் பரபரப்பு
திருப்பூரில் திருமணமான ஒரே நாளில் மணமகனை வேண்டாம் எனக்கூறி பிரிந்துள்ள சம்பவத்தைக் குறித்தும் இதற்கான காரணம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
உறவினர்கள் முன்னிலையில் திருமணம்
திருப்பூர் பிஎன்ரோடு பூலுவப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவருக்கு 25 வயதான இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரு வீட்டினர் சம்மதத்துடன் உறவினர்கள் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த பிறகு வரவேற்பு நடைபெற்றது. தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் நடந்த இந்த வரவேற்பு விழாவில் உள்ளூர் மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, இருவருக்கும் அவர்களுடைய உறவினர்கள் சீர்வரிசை செய்திருக்கிறார்கள். அப்போது மணமகனின் காலை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

மாப்பிள்ளையின் கால் கொடுத்த அதிர்ச்சி
மாப்பிள்ளையின் 2 கால்களில் ஒருகால் மட்டும் வித்தியாசமாக இருப்பதை அறிந்த இளம்பெண் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அப்போது, பணியின் போது விபத்தில் காலில் அடிபட்டதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் மணமகன் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னிடம் முன்பே ஏன் இதுகுறித்து தெரிவிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனையடுத்து குறித்த மாப்பிள்ளையுடன் வாழ முடியாது என்று கூறிய நிலையில், உள்ளூர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால் மணப்பெண் சமாதானம் ஆகாததால் இரண்டு பேரும் பிரி்ந்துவிடுவதாக கூறியுள்ளனர்.
ஒரு உண்மையை குடும்பத்தினர் மறைத்ததால் திருமணமான ஒருநாளில் புதுமாப்பிள்ளையை பிரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.