பழைய உரிமையாளரின் வீட்டைத் தேடி 27 நாட்கள் நடந்து சென்ற நாய்
பழைய உரிமையாளரின் வீட்டைத் தேடி கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று 27 நடந்து சென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பழைய உரிமையாளரை தேடிய நாய்
அயர்லாந்த் நாட்டில் புதிய உரிமையாளருக்கு விற்கப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று தனது பழைய உரிமையாளரை தேடி 64 கி.மீ தூரத்தினை 27 நாட்கள் நடந்து சென்றுள்ளது.
குறித்த நாயின் பெயர் கூப்பர். புதிய உரிமையாளர் வீட்டிற்கு வந்த உடனே காரில் இருந்து குதித்து தப்பி சென்றது. ஒரு மாதத்திற்கு காணாமல் போன நிலையில், தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் தேடப்பட்டது.


குறித்த நாய் ஏ்பரல் 22ம் தேதி காணாமல் போன நிலையில், பழைய வீட்டை நோக்கி சென்றதால் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மனிதர்களின் உதவியில்லாமல் தனியாக பயணித்த நாய் இரவு நேரத்திலும் தனது பயணத்தினை விடாமல் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் எந்தவொரு உதவியும் இல்லாமல், தனது மோப்ப சக்தியை மட்டுமே உறுதியாக நம்பி புத்திசாலித்தனமாக சென்றுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கூப்பரை பழைய உரிமையாளர் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் தனது புதிய உரிமையாளர் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பழகிவருவதுடன், கொஞ்சம் உணவு உண்பதாகவும் புதிய உரிமையாளர் நைஜெல் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.


