36 வருடங்களின் பின் இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி இது எப்படி?
பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 36 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி டெஸ்டில் வென்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி
சனிக்கிழமை பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாளில் நியூசிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், வெளிச்சம் குறைவாக இருந்ததால் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர்.
இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இன்று 2ஆவது பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அவுட் செய்தார். இந்த நேரத்தில் இந்திய அணியில் டெவோன் கான்வே (17) மற்றும் வில் யங் ஆகியோர் தொடக்க அடியிலிருந்து மீண்டனர்.
இந்திய அணியின் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் மாறி மாறி பந்து வீசினர். ஆனால் நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் விக்கட்டுக்களை இழக்காமல் விளையாடினார்கள்.
இவர்கள் 35 ரன்களை எடுத்திருந்தனர். கான்வேவை பும்ரா அவுட் செய்தார். ஆனால் அதன் பிறகு இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் வேகப்பந்து எடுபடாத நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டனர்.
இவர்களால் ரன்கள் எடுக்கப்பட்டது ஆனால் விக்கட் விழவில்லை. கடைசியாக வில் யங் (48) மற்றும் ரச்சின் ரவீந்திரா (39) இருவரும் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். இறுதியாக நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக நியூசிலாந்து சரித்திரம் படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 36 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை படைத்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |