அமெரிக்கர்களை சுண்டி இழுக்கும் ஈழத்தமிழனின் தோசை - யார் இந்த தோசை மனிதன்?
யூயார்க் நகர மக்கள் இப்போது பருப்பு மற்றும் பிற காய்கறிகளுடன் கூடிய சூடான, சீஸ் தோசைகளை விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கின்றனர்.
தோசை மனிதன் திருக்குமரன் கந்தசாமி
அதாவது இவர் இலங்கையை சேர்ந்த தமிழர் ஆவார். தற்போது வடகிழக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகர மக்கள் இப்போது பருப்பு மற்றும் பிற காய்கறிகளுடன் கூடிய சூடான, சீஸ் தோசைகளை விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கின்றனர்.
அதற்கு காரணம் நியூயார்க் நகரின் திருக்குமார் கந்தசாமிதான். இவர் காலை 9 மணியளவில், வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் தள்ளு வண்டியில் ஆவி பறக்க பறக்க சீஸ் தோசைகளை உருவாக்கி அதை மக்களுக்கு விற்று வருகிறார்.
இதை வாங்கும் மக்கள் இந்தியர்களோ இலங்கையர்களோ அவ்வளவு இல்லை. அவர்கள் நியூயார்க் நகர மக்கள் அதாவது அமெரிக்கர்கள். இவாகள் இவரின் ரெகுலர் கஸ்டமர்களாகவும் இருக்கிறார்கள்.
யார் அந்த திருக்குமரன் கந்தசாமி?
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கையில் இருந்து பல கனவுகளுடன் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார். தற்போது நியூயார்க் நகரத்தில் ஒரு தோசை விற்கும் தோசை மனிதன் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார்.
இவர் திரு என்ற பெயருடன் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தில் இது போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார். திருக்குமார் கந்தசாமி யாழ்ப்பாணத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக இருந்தவர்.
இவர் காதல் திருமணம் செய்து தற்போது ஒரு மகளும் இருக்கிறார். இவர் இந்த சீஸ் மசாலா தோசை செய்வதற்கு தன் பாட்டி மற்றும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளார்.
திருவின் தோசைக்கு கனடா, ஜப்பான் மற்றும் கலிஃபோர்னியாவில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். மசாலா தோசைகளுடன் காரம் நிறைந்த தேங்காய் சட்னி மற்றும் 11 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய பருப்பு சூப் வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |