2023ஆம் ஆண்டு ராசிபலன் - யார் யாருக்கெல்லாம் தனலாபம்... இந்த 4 ராசியும் மகிழ்ச்சியில் திளைக்கப்போகிறீர்கள்?
2023 புது வருடம் பிறக்கப்போகிறது.
இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் யாருக்கெல்லாம் லாபம் இரட்டிப்பாகும்.
அதனால் யாரெல்லாம் நிம்மதியை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு 2023ஆம் ஆண்டு புத்தாண்டு நிறைய நன்மைகள் நடைபெறப் போகிறது.
வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். 7ஆம் வீட்டில் சனி இடப்பெயர்ச்சி அடைவதால் நிறைய தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மனதில் உற்சாகம் பிறக்கும். குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு பாக்ய ஸ்தானத்திற்கு செல்லும் போது குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
கன்னி
2023ஆம் ஆண்டு உங்களுக்கு முக்கியமான கிரகங்கள் பயணத்தை பார்த்தார் சனி பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுடைய எதிரிகள் தொந்தரவு நீங்கும்.
வேலை செய்யும் இடத்தில் பளுவும், மன அழுத்தமும் அதிகரிக்கும்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வீடு கட்ட கடன் வாங்குவீர்கள். மே மாதம் வரை குருபகவான் பயணம் சாதகமாக உள்ளது.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு எதிர்பாராத சம்பவங்கள் அதிகம் நடைபெறும். 2023ஆம் ஆண்டு யோகமான ஆண்டாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு பத்து மாதங்களுக்கு ராசியிலேயே கேது பயணம் செய்கிறார். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார்.
அதே போல குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் இருந்து ஏழாவது வீட்டிற்கு நகர்கிறார். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது.
விருச்சிகம்
உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் ஒரு வளமான ஆண்டாக இது அமையும். பெரிய அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. சுக ஸ்தானத்திற்கு சனிபகவான் வரப்போகிறார்.
சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 5 மற்றும் ஆறாம் வீடுகளில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைகிறது. மே மாதத்திற்கு முன்பாக திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசி முடிக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரப்போகிறது.