புத்தாண்டு 2023 ராசிபலன்! குறி வைக்கும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்
புதிய ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்கள் மாத்திரமே உள்ளது.
பிறக்க போகும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருப்போம்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
புத்தாண்டு 2023 ராசிபலன்
ரிஷபம்
புத்தாண்டு உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். சனிபகவானின் சிறப்பு ஆசீர்வாதங்களினால் ஆண்டின் நடுப்பகுதியில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு மிகப்பெரிய சொத்தை வாங்குவீர்கள். புதிய வருடத்தில் தொட்டதெல்லாம் துலங்கும். நல்ல செய்திகள் தேடி வரும்.
மிதுனம்
2023ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். இந்த ஆண்டு உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
புத்தாண்டில் உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். சனி பகவானின் ஆசீர்வாதம் இருக்கும் என்பதால், பல பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
விருச்சிகம்
உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.